நாட்டில் அமைதியற்ற சூழல்நிலை ஏற்படுமானால் அது சுற்றுலாத்துறையின் வளர்ச்சியில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென் மாகாணத்தில் இடம்பெறும் பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, பெந்தர, அஹூங்கல்ல, கொஸ்கொட, ரத்கம, ஹிக்கடுவ போன்ற பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பா போன்ற நாடுகளில் மக்கள் அமைதியான சூழலில் வாழ விரும்புகின்ற போது, இங்கு துப்பாக்கிச் சூடு சத்தத்தை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதும் மிகவும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலாத்துறை தொடர்பான பல்வேறு செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.