மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான தொழிற்சங்க தலைமைத்துவ சபை கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி முதல் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது
பொருளாதார நீதியை அடைவதற்கு சுகாதார சங்கங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளதுடன் மேலும் தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ச்சியான நாம் போராடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.