மாத்தறை மாவட்டத்தின் வல்கம பிரதேசத்தில் மசாஜ் நிலையத்தில் பணியாற்றி பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிடிப்பு நிலைய உரிமையாளர் உட்பட 5 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி இரவு மாத்தறை வல்கம பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாகவும் மற்றும் பணிப்பெண்கள் குழுவொன்று பெண் ஊழியரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் அதே பகுதியில் மற்றொரு மசாஜ் நிலையத்தினை நடத்தி வருவதாகவும் அதில் குறித்த தாக்கப்பட்ட பெண் பணிபுரிந்து வந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் வேறு ஒரு நபருடன் உறவினை பேணி வந்த நிலையில் உரிமையாளர் குறித்த பெண்ணிடம் இது தொடர்பாக விசாரணை செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இளம்பெண் தனக்கு நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பான விவாதம் கைகலப்பாக மாறியதை தொடர்ந்து உரிமையாளர் கூரிய அயுத்தினால் பெண்ணை தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரையும், தாக்குதலில் ஈடுபட்ட 4 பெண்களையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
சந்தேகநபர்களை மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.