சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல் டிக்கெட்டுக்களை விற்பனை செய்த 24 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதே வேளை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மைதானத்தின் காவலாளி போன்று சீருடை அணிந்து கொண்டு ரசிகர்கள் இருவரிடம் தலா 25 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.