ரஷ்யாவின் தெற்கு பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த மூவரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
பொது இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் பிரான்சில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை ரத்து செய்ய பிரான்ஸ் உளவுத்துறை பரிந்துரைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் மாஸ்கோவில் கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உருவாகும் சாத்தியக்கூறுகளே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக புலனாய்வு அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.