ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியின் தேசிய அமைப்பாளராக மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் கே பீ குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்
கட்சியின் பொருளாளராக மேல்மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டுள்ளார்
இதேவேளை கட்சியி ன் சிரேஷ்ட உபதலைவராக சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுகூட்டத்தில் இன்று இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
முன்னதாக இன்றைய மத்திய குழுகூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதவிநிலைகளில் இருந்து நீக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதனையடுத்து குறித்த பதவி நிலைகளுக்கு புதியநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.