ஜனாதிபதி தேர்தலுக்காக ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்
எனவே இந்த வருட இறுதிக்குள் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கான எழுதுகருவி பொருட்களை கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் தேர்தல் தொடர்பில் அனைத்து உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது