ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் பிறப்பு வீதம் குறைந்து வருவதாக அந்நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த 2022ஆம் ஆண்டு அங்கு குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது எனவும், ஆனால் 2023இல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்தாண்டு 379,000 குழந்தைகள் பிறந்துள்ளதுடன் இது முந்தைய ஆண்டை விட சுமார் 14 ஆயிரம் குறைவாக உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஜனவரி 1ஆம் திகதி நிலவரப்படி நாட்டில் 5.80 கோடி மக்கள் வசித்து வருகின்றனர் எனவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7000 பேர் குறைவாக உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வெளிநாடுகளில் இருந்து இத்தாலிக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.