மியன்மாரில் சைபர் குற்றவலயத்தில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து வசந்த யாப்பா பண்டார கருத்துத் தெரிவிக்கையில் ”ஆப்பிரிக்கா 26 மாணவர்களை நேற்று பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளது. மியன்மார்சைபர் குற்றவலயத்தில் இருந்து அரசாங்க தலையீட்டுடன் 8 பேரை மீட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
ஆனால் சீனாவின் அழுத்தம் காரணமாக முகாமில் பயங்கரவாதிகள் சிலர் வெளியேறியிருந்தனர். இதன்போது அங்கிருந்த 8 பேர் மியன்மார் பொலிஸாரால் மீட்கப்பட்டனர். இதில்அரசாங்க தலையீடு உள்ளதாக எமக்கு தெரியவில்லை. குறித்த சைபர் குற்றவலயமுகாமுக்கு செல்வதற்கு தாய்லாந்து ஊடாக நுழைவுப் பாதை ஒன்று உள்ளது.
தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருடன் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு எமக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி தரவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை உள்ளடக்கிய குழுவொன்று அங்கு சென்று கலந்துரையாட தயாராக உள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனிடையே தாய்லாந்து அரசாங்கத்துடன் பேச்சுவாரத்தை நடத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திதருவதாக வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இதன்போது பதிலளித்தார்