உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை தொடர்பில் இன்றே பதில்வழங்குவது கடினமான விடயமாகும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளதாவது ” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனஅண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தற்போது நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
எனவே எதிர்க்கட்சி தலைவர் கூறுவது போன்று இன்றே பதில் வழங்குவது இயலாத விடயமாகும். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எதிர்வரும் நாட்களில் இதற்கு பதிலளிப்பார். அன்று இந்த சம்பவம் இடம்பெற்றபோது நீங்கள் அமைச்சரவையில் இருந்தீர்கள்.தாக்குதலை தடுத்திருக்கலாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.