துருக்கியில் இரண்டு தசாப்தங்களாக ஆட்சிபுரிந்த ஜனாதிபதி டயிப் ஏர்டோகன் தலைமையிலான அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
துருக்கியில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளுராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று இடம்பெற்றது. இந்த நிலையில் சுமார் 60 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் இஸ்தான்புல் நகரில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட இமாமோக்லு முன்னிலைவகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்தான்புல் மற்றும் அங்காரா ஆகிய நகரங்களில் குடியரசுக்கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 81 மாகாணங்களில் 36 இடங்களில் குடியரசுக்கட்சி முன்னிலைவகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி 15ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையில் ஜனாதிபதி டயிப் ஏர்டோகன் தேர்தலில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சிபுரிந்த டயிப்ஏர்டோகன் எதிர்கொண்ட பாரிய தோல்வியாக இது கருதப்படுகின்றது.
கடந்த 21 வருடங்களுக்கு முன்னதாக டயிப் ஏர்டோகன் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வரலாற்றில் முதற்தடவையாக அவரது கட்சி தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்படி சுமார் ஒரு மில்லியன் வாக்குகளின் அடிப்படையில் குடியரசுக்கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துருக்கியின் ஜனாதிபதி டயிப்ஏர்டோகன் கடந்த 1994 ஆம் ஆண்டு தனது 70 ஆவது வயதில இஸ்தானபுல் மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றதன் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது