சகல வரிகளும் நீங்கலாக 92 ரூபாய்க்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்து அதனை 700 ரூபாய்க்கு விற்பனை செய்யும் செயற்பாட்டை வர்த்தகர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மாத்திரம் பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் 8 ஆயிரம் கோடி ரூபாய் இலாபமடைந்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று உருளைக்கிழங்கு இறக்குமதியாளர்கள் 1,500 கோடி ரூபாயும், காய்ந்த மிளகாய் இறக்குமதியாளர்கள் 1,800 கோடி ரூபாயும் இலாபமாகப் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் பெற்றுக்கொண்டுள்ள இலாபத்தில் 36 வீதத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், புத்தாண்டு காலத்தில் மக்களை சுரண்டிப் பிழைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதை வர்த்தகர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வழி வகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.