பாடசாலை மட்டத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்து இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.
மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் நேற்றையதினம் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜிடம் முறைப்பாடு கையளிக்கப்பட்டிருந்தது.
கடந்த வாரம் நடைபெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வன்மை போட்டியின், இல்ல அலங்காரங்களில் மாணவர்களின் வெளிப்பாடுகள் தொடர்பாக, தெல்லிப்பழைப் பிரிவு பொலிஸார், மாணவர்களையும் ஆசிரியர்களையும் விசாரணைக்கு அழைத்தமையும், விசாரணைக்கு உட்படுத்தியமையும் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற நடவடிக்கை என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.