மதுவரிச் சட்ட விதிகளுக்கு முரணான மதுபான உரிமங்களை வழங்குவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இலங்கை மதுபான அனுமதிப்பத்திரம் வைத்திருப்போர் சங்கம் உட்பட பல தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட 3 அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம், மே மாதம் 10 ஆம் திகதி வரை இந்த இடைக்கால உத்தரவை அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மற்றும் ஏனைய சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, சட்டத்திற்கு முரணான வகையில் முறைசாரா முறையில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர்.
சில உரிமங்களை வழங்கும் போது மதுவரி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை தேவைகள் கூட மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் முன்வைக்கப்பட்ட அனைத்துப் சமர்ப்பணங்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம் மதுவரிச் சட்ட விதிகளுக்கு முரணான மதுபான உரிமங்களை வழங்குவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.