பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் ”பண்டுக ஸ்வர்ண ஹன்ச” தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இன்று முதல் நாடாளாவிய ரீதியில் 200 பஸ்கள் சேவையில் ஈடப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவைகள் இடம்பெறும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், தமிழ், சிங்களப் புத்தாண்டு விடுமுறையின் போது பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை சீராக செயற்படுத்துமாறு ஜனாதிபதி, உரிய அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.