ராஜஸ்தான் மாநிலம் சுருவில் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்ற தீர்மானன்த்தோடு ஒட்டுமொத்த நாடும் பணியாற்றுவததாகவும் அதில் ராஜஸ்தான் மிகப்பெரிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்த அவர் ஏமாற்றமும் விரக்தியும் தன்னை நெருங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் , 2019 ஆம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
10 வருடங்களில் நாங்கள் செய்தது எல்லாம் டிரைலர்தான். பசியை தூண்டுவதுபோல், முக்கியமானது இன்னும் வெளியாகவில்லை. முத்தலாக் சட்டம் மூலம் இஸ்லாமிய சகோதரிகளை மட்டும் பாதுகாக்கவில்லை. மொத்த இஸ்லாமிய குடும்பங்களையும் மோடி பாதுகாத்துள்ளார் என கட்சியின் ஆதரவாளர்களும் உரையாற்றியுள்ளனர்.