காசாவுக்குள் மனிதாபிமான உதவிபொருட்களை கொண்டு செல்வதற்காக மேலும்; இரண்டு மார்க்கங்களை திறப்பதற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைப்பேசியில் கலந்துரையாடியதையடுத்து இஸ்ரேல் தரப்பு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி வடக்கு காஸாவில் டிரேஸ் கேட் நுழைவாயில் முதற்தடவையாக தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.
இதன்படி எஷ்டோட் துறைமுகம் ஊடாக மனிதாபிமான உதவிபொருட்கள் காஸாவுக்குள் கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக கடந்தவாரம் காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உலக மத்திய சமையலறை தொண்டுநிறுவன பணியாளர்கள் 7 பேர் கொல்லப்பட்டடிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது