டி.ஜே.ஞானவேலின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார்.
தலைவரின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதோடு அனிருத் இசையமைக்கிறார். தலைவர் 171 என்ற படத்துக்கு கழுகு என்ற பெயரை லோகேஷ் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் ரஜினியின் கையில் ரோலேக்ஸ் வாட்ச் கையில் பிணைக்கப்பட்டிருந்ததை பார்த்து ரோலேக்சின் தந்தை என கிசுகிசுக்கள் கசிந்து வந்தன.
இந்நிலையில் , தலைவர் 171 இல் நடிக்க ஷாருக்கானிடம் கேட்டு அவர் மறுத்ததன் காரணமாக ரன்வீர் சிங் இடம் பேச்சுவார்த்தை நடத்திய லோகேஷ்க்கு ரன்வீர் பச்சைக்கொடி காட்டியுள்ளார் என தெரியவந்துள்ளது.