பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயற்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற இலங்கை அணியின் வீரர் கமிந்து மெண்டிஸ், சர்வதேச கிரிக்கெட் சபையின் மார்ச் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விருதுக்கு ஏற்கனவே அயர்லாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் அடைர் மற்றும் நியூசிலாந்தின் மெட் ஹென்ரி ஆகியோரின் பெயர்கள்பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் கணிசமான ஓட்டங்களை பெற்ற 25 வயதான கமிந்து மெண்டிஸ் அந்த அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்றார். அதுமட்டுமல்லாது தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களை பெற்ற அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச்சிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.