ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையத்தை குறி வைத்து, உக்ரேன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா சரியான நேரத்தில் பதிலடி தாக்குதல் நடத்தியதால், பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இல்லையெனில் அணுக் கதிர்வீச்சு ஏற்படும் நிலைமை உருவாகி இருக்கும் என தெரிவித்துள்ள ஐ.நா. அதிகாரிகள் இத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீதே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த அணுமின் நிலையம் ஆரம்பத்தில் உக்ரேன் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆரம்பமான போரையடுத்து, குறித்த அணுமின் நிலையத்தை, ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி ஆரம்பமான போர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.