இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமாக 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
பாராளுமன்ற தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கண்காணித்து வருவதனால் அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ் குமாருக்கு, பாதுகாப்பு வழங்குவதற்கு உளவு துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி, ராஜீவ் குமார் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, அவருக்கு இசட் பிரிவும், மத்திய ரிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த வீரர்களும் பாதுகாப்பு வழங்குவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.