ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக மாறுபட்ட கருத்தினை தெரிவித்துவரும் நிலையில்
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ரஞ்சித் பண்டார இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரசன்ன
ரணதுங்க முன்வைக்கும் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும். அது கட்சியின் சார்பாக கூறப்பட்ட தீர்மானம் அல்ல.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக கட்சியின் நிறைவேற்று சபையினால் தீர்மானம் மேற்கொள்ளப்படும். அதன் பின்னரே நாம் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்போம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இல்லை என பலர் விமர்சிக்கின்றனர்.
ஆனால் அவ்வாறு அல்ல. நாம் சரியான நேரத்தில் எமது வேட்பாளரை களமிறக்குவோம். இன்று எம்மீது விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினர் ஜனாதிபதியாகும் கனவுடன் வலம்வந்தாலும் அவர்களுக்கு மக்கள் ஆணை கிடைக்கப்போவதில்லை.
ஏனென்றால் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார்.
ஆட்சிக்கு வர நினைப்பவர்கள் தங்களின் கொள்கை திட்டங்களை முன்வைக்கவில்லை. ஆனால் பொதுஜன பெரமுனவிடமே சிறந்த கொள்கை திட்டங்களும் வேலைத்திட்டங்களும் காணப்படுகின்றன” இவ்வாறு தெரிவித்துள்ளார்.