நாட்டிலுள்ள வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு காணவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வயதான கலைஞர்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம் வழங்குவது தொடர்பாக அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாட்டின் கலாசாரம் மற்றும் பல்வேறு கலைத் துறைகளை உயிர்பித்த உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் உங்களது இளமையும் போய்விட்டது.
வயதான பல கலைஞர்களை இந்த ஓய்வூதிய வாழ்வாதார உதவித் திட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடியும். பல்வேறு துறைகளில் கலையை உயிர்ப்பித்த எம் நாட்டின் கலைஞர்கள் இன்று தொலைதூர கிராமங்களில் இருந்து வருகைதந்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் அரசாங்கத்தின் கௌரவத்தை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.