சொல்லுங்க மாமா குட்டி என அனைத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த பிரதீப் , கோமாளி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
லவ் டுடே திரைப்படம் மூலம் நடிகனான பிரதீப் அனைவரக்கும் தெரிந்த, பிடித்த ஒரு நபராக மாறியிருந்தார். விக்னேஷ் சிவனுடன் எல்சியு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் பிரதீப் இன்று ரசிகர்களுக்கு ஒரு புது அப்டேட் கொடுத்துள்ளார்.
அதற்கமைய , அவரது கல்லூரி சிநேகிதனும் , ஓ மை கடவுளே படத்தின் இயக்குனருமான அஷ்வத் மாரிமுத்துவுடன் இணைந்து பிரதீப் புதிய படங்களுக்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
இதற்காக ஒரு காணொளியை வெளியிட்டுள்ளனர். கல்பாத்தி அகோரம் தயாரிக்க உள்ள இந்த படத்துக்கான பெயரை வெகு விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.