புத்தாண்டு காலத்தில் இனிப்புவகைகள் உள்ளிட்ட பட்சணங்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பண்டிகைக்காலத்தில் தரமற்ற உணவுப்பொருட்கள் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
நுகர்வோர் இனிப்புக்கள் பட்சணங்கள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உணவுப்பொருட்களின் தரம் மற்றும் காலாவதி திகதி பொருட்களின் உள்ளடக்கம்தொடர்பாக கவனம் செலுத்துமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சந்தையில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுற்றாடல் சுகாதாரம் மற்றும் உணவு சுகாதார சங்கத்தின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தரமற்ற உணவு விற்பனை செய்யப்படும் பட்சத்தில் பொதுமக்கள் 0112 11 27 18 எனும் இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.