ஜனாதிபதித் தேர்தலில் தன்னை பொது வேட்பாளராக களமிறங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதுதொடர்பாக ஓரிரு நாட்களில் தீர்மானமொன்றை வெளியிடவுள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக முன்னிலையாகுமாறு பல்வேறு தரப்பினர் என்னிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவும் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.
மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக தீர்க்கமாக சிந்தித்து விரைவில் தீர்மானத்தினை அறிவிப்பேன். எதிர்வரும் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமிக்க தேர்தலாகும். கட்சிக்காக வாக்களிக்கும் வாக்காளர்கள் தற்போது இல்லை. தேர்தலில் முன்னிலையாகும் வேட்பாளர் தொடர்பிலேயே மக்களின் சிந்தனை உள்ளது” இவ்வாறு விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.