பொருளாதாரக் கொள்கைத் திட்டம் கிடையாது என்பதாலேயே தேசிய மக்கள் சக்தி விவாதத்திற்கு பின்வாங்குவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாம் தேசிய மக்கள் சக்தியுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விவாதத்தை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளோம்.
ஆனால் தேசிய மக்கள் சக்தி விவாதத்திற்குத் தயாரில்லை என்ற விடயம் தெளிவாகின்றது.
ஏனெனில் அவர்களிடம் பொருளாதாரக் கொள்கைத் திட்டம் கிடையாது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சிறந்த பொருளாதார திட்டம் காணப்படுகின்றது.
அவர் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர் அல்ல. அதேபோல் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவார் ரணில் விக்ரமசிங்க கட்சியில் எவருக்கும் சந்தர்;ப்பம் வழங்கமாட்டார்.
அனைத்தையும் அவரது அதிகாரத்தின் கீழேயே செயற்படுத்துவார்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்தார்.