அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களினால் இஸ்ரேலிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை தொடர்ந்து கொலம்பிய பல்கலைக்கழகம் வகுப்பறை கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நியுயோர்க் பல்கலைக்கழகத்திலும் யால் பல்கலைகழகத்திலும் பல மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலம்பிய பல்கலைக்கழகத்தின் வெளியே முகாமிட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
நியுயோர்க் பல்கலைக்கழகத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர்.
மாணவர்களுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டபோதும் அது பலனளிக்காத நிலையில் பொலிசாரை வரவழைத்தாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியதற்கு எதிராக மாணவர்கள் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மாணவர்கள் மத்தியிலான பதற்றமும் அதிகரித்து காணப்படுகின்றது.
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை தங்களது பல்கலைக்கழகங்கள் கண்டிக்கவேண்டும் என்றும் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் இருந்து விலகியிருக்கவேண்டும் என பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மாணவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக கொலம்பிய பல்கலைக்கழகத்திலும் பதற்றநிலை அதிகமாக காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.