இந்தியா – தமிழ்நாட்டில் கோடை வெயில் உக்கிரம் அடைந்துள்ளதுடன், சில மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி வரை பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை 4 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் இவ்வாறு மஞ்சள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், தமிழ்நாட்டின் சில இடங்களில் வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டின் ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பொது மக்களை அவதானமாக செயற்படுமாறும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.