பிரான்ஸின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
தமது சேவைகளை மறுசீரமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
விமானப் போக்குவரத்தில் கணிக்கப்பட்ட அதிகரிப்புகளைச் சிறப்பாக எதிர்கொள்வதற்கு விமானப் போக்குவரத்து அதிகாரிகள் பணி அட்டவணையை மாற்றியமைத்து வருகின்றனர்.
இருப்பினும், தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோருகின்றனர்.
இந்த நிலையில், பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை 24 மணிநேரம் நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக பிரான்ஸ் விமான சேவைகள் மற்றும் சர்வதேச விமான சேவைகள் பாரிய இடையூறுகளை எதிர்கொள்ளுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், பிரான்ஸின் 70 வீதமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதனால் மக்கள் பெரும் இடையூறு மற்றும் நீண்ட தாமதங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், பிரான்ஸ் வான்வெளியில் பயணிக்கும் விமானங்களும் பாதிக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது.