இலங்கையில் ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய அணுகுமுறை தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற தேசிய ஏற்றுமதியாளர் சபையின் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு ஏற்றுமதி துறையை விரிவுபடுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்தார்.
ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு தொழில்நுட்ப அணுகுமுறை மூலம் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஏனைய நாடுகளுடன் பல புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.