மனிதாபிமான கண்ணிவெடி குறைப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு பாராட்டைப் பெற்றுள்ளது.
மனிதாபிமான கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான சர்வதேச மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
இதில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டதுடன், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனீவா சர்வதேச மையம் மற்றும் கண்ணிவெடி நடவடிக்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்புக் குழு ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மனிதாபிமான கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின்படி, கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஒவ்வொரு நாடும் அடைந்துள்ள முன்னேற்றம், வெற்றிகரமான மேலாண்மையில் பெற்ற அனுபவம் மற்றும் அறிவு பரிமாற்றம், சவால்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது