தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய இந்திய பிரததர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்கு செலுத்த வேண்டும் எனவும் ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் 2024 மக்களவை தேர்தலில் 93 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
அதன்படி, உத்தரபிரதேசம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது,
இந்தியாவின் தேர்தல் உலகின் ஜனநாயக நாடுகளுக்கு உதாரணமக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சுமார் 64 நாடுகளில் தேர்தல் நடைமுறை உள்ளதாகவும், அவையனைத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல் கள நிலவரத்தை ஆய்வு செய்ய செல்லும் ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 102 தொகுதிகள், ஏப்ரல் 26 ஆம் திகதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.