மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய மத்திய வங்கி சட்டத்தின் பிரகாரம் மத்திய வங்கியின் சுயாதீனம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது. குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை மத்திய மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தும் சட்டம் மிகவும் பாராதூரமானது.
அதனாலேயே நாடாளுமன்றில் நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.
அரசாங்கம் வேறு மத்திய வங்கி வேறு என்ற நிலைப்பாட்டிலேயே மத்திய வங்கியின் நடவடிக்கைகள் அமையும்.
அவ்வாறான பின்னணியிலேயே மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தினை அதிகரிப்பதற்கு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சம்பள அதிகரிப்புக்கு நாடாளுமன்றின் அனுமதி தேவையில்லை என்ற நிலையும் காணப்பட்டது. எனவே மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்படுவதனால் அது யாருக்கு உரித்தாகும் என்ற கேள்வி எழுகின்றது.
மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும்.
ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு வேறுபாடு இன்றி இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மத்திய வங்கியின் அனைத்து ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.