தென்மேற்கு சீனாவில் உள்ள மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனான் மாகாணத்தில் உள்ள Zhenxiong மக்கள் மருத்துவமனையில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது 23 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.