உமா ஓயா பல்நோக்கு திட்டத்தின் மூலம் தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவோட் மின்சார அலகுகள் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
குறித்த திட்டம் 2017 ஆம் ஆண்டு மக்களிடம் கையளிக்கப்படவிருந்த போதிலும் அதனை நிறைவேற்ற முடியாமல் இலங்கை மின்சார சபைக்கும் நாட்டுக்கும் வருடாந்தம் 900 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உமா ஓயா திட்டத்தின் ஊடாக தேசிய அமைப்பில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மின்சார அலகுகளின் எண்ணிக்கை காரணமாக, எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவில் மின்சார நுகர்வோர் பயனடைய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் எதிர்வரும் ஜூலை மாதம் மின்சாரக் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படும் அதே வேளையில் அந்த அனுகூலத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.