வடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பயிற்சிகளுக்காக மாத்திரம் 4 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் செயல்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களை அடிப்படையாக கொண்டு குறித்த தகவல் வெளிக்கொணரப்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பல செயற்றிட்டங்களுக்காக 9 பில்லியன் ரூபாய் கடந்த வருடம் செலவிடப்பட்டுள்ளதுடன், பயிற்சிகளுக்கு 4 பில்லியன் ரூபாவும் கண்ணிவெடி அகற்றலுக்கு 3 பில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
ஆனால் பயிற்சிகளுக்கு இவ்வளவு பெரும் தொகையை செலவு செயயும்போது அதில் பங்கேற்றவர்கள் பயிற்சியுடன் தொடர்புடைய ஏதாவது தொழில் வாய்ப்புக்களை செய்கிறார்களா இல்லையா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், பயிற்சிகளில் பங்கேற்றவர்களுக்கான தொழில்வாய்ப்புக்கள் குறித்து அரச சார்பற்ற நிறுவனங்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.