சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று சபையில் தெரிவித்திருந்தார்.
சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இன்று நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் ரமேஷ் பத்திரன,
“2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் 30 ஆயிரத்து 657 ஆகவும் 2016இல் 37 618 ஆகவும் 2017 இல் 43 835 ஆகவும் 2018இல் 50 310 ஆகவும் 2019 இல் 59 283 ஆகவும் 2020 இல் 63 914 ஆகவும், 2021 இல் 65 453 ஆகவும் 2022 இல் 67 706 ஆகவும்
2023 இல் 62 549 ஆகவும் காணப்பட்டது.
வருடாவருடம் நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிந்தது.
எனவே இவ்விடயத்தில் அதிக கவனமெடுத்து சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை நாடு முழுவதிலும் முன்னெடுக்கவுள்ளது” என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார்.