”எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க முடியாது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க முடியாது. அதேபோல் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை பிற்போடவும் முடியாது. குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நிச்சயமாக நடத்த வேண்டும்.
அதேபோன்று இடைக்கால ஜனாதிபதி ஒருவர் உடனடியாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்தவும் முடியாது. அதனாலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று தேர்தல் தொடர்பான தெளிவான தீர்மானத்தை அறிவித்தார். அது இந்த நாட்டு மக்களை தெளிவூட்டுவதற்காக அவர் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையாகவே தெரிகின்றது. ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் எந்தவகையிலும் தேர்தலை பிற்போட முடியாது” இவ்வாறு அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.