தமிழினப்படுகொலையின் 15 ஆவது ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வில், பேதங்களைத் துறந்து, சுயலாப, சுய விளம்பரப் படுத்தல்களைக் கடந்து, தமிழர்களாக அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழினப்படுகொலையின் 15 ஆவது ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வுக்காக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முற்றத்தில் நேற்று மாலை ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பைச் சேர்ந்த இணைத்தலைவர்களில் ஒருவரான தென்கயிலை ஆதீனத்தை சேர்ந்த தவத்திரு அகத்தியர் அடிகளாரால் ,ந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ,ன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முற்றத்தில் சிரமதான பணிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.