பிரேசிலில் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிரேண்டே டூ சுல் (Rio Grande do Sul) மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன், இந்த வெள்ளப்பெருக்குக் காரணமாக அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 126 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 136ஆக அதிகரித்துள்ளதாகவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அவர்களைத் தேடும் பணியில், மீட்புப் படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.