முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10.30 க்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் இடம்பெறவுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர் தவத்திரு அகத்தியர் அடிகளார் 15 ஆவது இனப்படுகொலை நினைவேந்தலுக்கான அழைப்பினை விடுத்துள்ளார்.
தமிழினத்தின் அடக்கு முறைக்கு எதிரான விடுதலை போராட்டத்தின் ஆயுதப் போராட்ட பரிமாணத்தை மௌனிக்க செய்து 15 ஆண்டுகள் நிறைவடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய தினம் மாலை 6மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணி ஓசை ஒலி எழுப்பி இயலுமான வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறி நினைவுகூறுமாறும் அழைப்ப விடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதியில் சிரமதான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.