காசாவில் ‘மனிதாபிமான போர் நிறுத்தம்’ தேவை என ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
குவைத்தில் அண்மையில் இடம்பெற்ற சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”காசாவில் உடனடியாக மனிதாபிமான போர்நிறுத்தம் தேவை. அனைத்து பணயக்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். மனிதாபிமான உதவிகளில் உடனடி எழுச்சிக்கான எனது அழைப்பு மற்றும் உலகின் அழைப்பை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
போர் நிறுத்தம் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். இந்தப் போரின் பேரழிவுகள் மற்றும் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலங்கள் தேவைப்படும்” இவ்வாறு அன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.