முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டமை மைத்ரிபால சிறிசேனவின் திட்டங்களில் ஒன்றாகும்.
மைத்ரிபால சிறிசேனவின் கூற்று தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மைத்ரிபால சிறிசேன சொல்லில் ஒன்றும் செயலில் ஒன்றையும் செய்பவர்.
அதிகாரபூர்வமாக அவர் எதனையும் செய்வதில்லை.மைத்ரிபால சிறிசேன கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு நீதிமன்றம் ஏற்கனவே தடைவிதித்திருந்தது.
அவ்வாறான ஒரு நிலையில் அவர் கட்சி சார்ந்த எந்தவொரு தீர்மானங்களையுமட் மேற்கொள்ளமுடியாது. மைத்ரிபால சிறிசேன நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார்” இவ்வாறு மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.