இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதிகளில் இடம்பெற்ற கொடூரங்கள் மற்றும் வன்முறையை நினைவுகூருவதை நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுவதை தடை செய்யும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளும், அதற்காக தெரிவிக்கப்படும் காரணங்களும் இதனை தெளிவாக வெளிப்படுத்துவதாக, அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கஞ்சி பரிமாறுவதற்கு கல்முனை நீதிமன்றமும் தடைவிதித்துள்ளததாக, தெரிவித்த அவர்,
அரசாங்கத்தை பொறுத்தவரை மே18 ஆ திகதியை நினைவுகூருவது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு புத்துயிர் கொடுப்பதாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும், முள்ளிவாய்க்கால் கஞ்சியை பரிமாறுவதை பொலிஸார் தடுக்கும் செயற்பாடுகள், டிரான் அலஸின் உத்தரவின் கீழ் இடம்பெறுகின்றதா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்வதற்கான காரணங்கள் நோய் பரவுவதை தடுப்பதிலிருந்து, தமிழீழ விடுதலைப்புலிகள் புத்துயிர் பெறுவதை தடுப்பதாக மாற்றமடைந்துள்ளதாக அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.