நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ள 1 இலட்சத்து 78 ஆயிரத்து 613 பேர் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா? என்பதை ஆராய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 37 ஆயிரத்து 183 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 12 ஆயிர்த்து 963 நபர்கள் வாடகை வீடுகளிலும் 10 ஆயிரத்து 755 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 133 நபர்கள் வாடகை அறைகளிலும் தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் பல்வேறு வகையான குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் நபர்கள், இவ்வாறு வாடகை வீடுகளில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.