பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மார்ச் 25ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், குறித்த சட்டமூலத்தின் ஆரம்ப வரைவுக்கு கொள்கைரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கிய முறையான சட்டமூலத்தை சமர்ப்பிக்குமாறு சட்ட வரைவாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து தயாரிக்கப்பட்ட வரைவு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.
இதன்படி, இது தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


















