புதிய அரசியல் கூட்டணி தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆளுந்தரப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவர் நிமல்சிறிபால டீ சில்வா தரப்பினருடன் இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவர் நிமல் சிறிபால டீ சில்வா தரப்பினர் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கிடையில் இன்று முற்பகல் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, மஹிந்த அமரவீர மற்றும் நளின் பெர்ணான்டோ நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.