இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயலாளர் கிரிஷான் கபுவத்த ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முறைப்பாட்டுக்கு எதிராக பிரதிவாதி தலைவர் சட்ட விரோதமாகவும் தன்னிச்சையாகவும் ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளதாக முறைப்பாடு சார்பில் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்த சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மேலும், கிரிக்கெட் அமைப்பில் ஊழல், முறைகேடுகள் நடப்பதாகவும் செய்தியாளர் சந்திப்பு நடத்தி வெளிப்படுத்தியதால் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, புகாரின் உண்மை தன்மையை பரிசீலித்த மாவட்ட நீதிபதி, ஒழுங்கு விசாரணை நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் பிரதிவாதிகளை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அழைப்பானையும் அனுப்பப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.