அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் 10 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மிகவும் வறுமையான மற்றும் வறுமையான பிரிவுகளின் கீழ் 313,947 குடும்பங்களும் 653,047 குடும்பங்களும் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நலன்புரித் திட்டங்களைப் பெறுவதற்கு 200,000 பேர் தகுதியடைந்துள்ளபோதிலும் அவர்களுக்கு உரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதும் குழுவில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, பெரும் எண்ணிக்கையிலான நபர்கள் தவறான தகவல்களை வழங்கி அஸ்வெசும பயனாளிகளாகியிருப்பது புலனாகியிருப்பதால் நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான
தகவல்களை வழங்கியவர்களின் புள்ளிவிபரங்கள் அடங்கிய அறிக்கையயும் பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவிடம் சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.